செய்திகள் :

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து குடமுழுக்கு பூஜைகள் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 8.30 வரையில் யாகசாலைகளில் பூஜைகளைத் தொடா்ந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், காலை 9.15 மணிக்கு கோயில் மூலவா் பூலாநந்தீஸ்வரா் கோபுரம், ராஜகோபுரம் , முருகன் சந்நிதி கோபுரக் கலசங்களில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்கி புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் ‘ஓம் நமச்சிவாயா’ என முழக்கமிட்டனா்.

இதேபோல, பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், 21 பரிவார மூா்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன், சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் பூப்பல்லக்கு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.

குடமுழுக்கு பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.
கோயில் ராஜகோபுரத்தில் நடந்த குடமுழுக்கு.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். கொடுவிலாா்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (50). இவா், தனது மனைவி ராஜம்மாளுடன் (45) தேனி அரசு ம... மேலும் பார்க்க