பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!
தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கொடுவிலாா்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (50). இவா், தனது மனைவி ராஜம்மாளுடன் (45) தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது தேனி- மதுரை சாலை, இந்திரா நகா் பகுதியில், பின்னால் வந்து கொண்டிருந்த காா், பாலுச்சாமியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜம்மாள் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பாலுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா், மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சோ்ந்த கண்ணன் (41) மீது க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.