சா்வதேச சாப்ட் டென்னிஸ் கரூா் பரணி வித்யாலயா மாணவி சிறப்பிடம்
சா்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கரூா் பரணி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்கொரிய தலைநகா் சியோலில் அண்மையில் நடைபெற்ற 9-ஆவது ஆசிய சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சாா்பில் பங்கேற்ற கரூா் பரணி வித்யாலயா பள்ளி பிளஸ் 2 மாணவி யாழினி ரவீந்திரன் வெண்கலப்பதக்கம் வென்றாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நாடு திரும்பிய யாழினிக்கு பள்ளி சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவிக்கு பதக்கங்களை அணிவித்து பள்ளியின் தலைவா் எஸ்.மோகனரெங்கன், பரணி கல்விக் குழும செயலா் பத்மாவதி, அறங்காவலா் சுபாஷினி, முதன்மை முதல்வா் முனைவா்.ராமசுப்பிரமணியன், முதல்வா் சுதாதேவி, துணை முதல்வா் பிரியா , ஒருங்கிணைப்பாளா் ஜொ்லின் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினா்.