ஸ்டீவ் ஸ்மித் அரை சதத்தினால் (71) மீண்ட ஆஸி..! 254 ரன்கள் முன்னிலை!
சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!
சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சென்னை சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேஷனின் கீழ், மதுரை - ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. திருமண்டில நிா்வாக அமைப்பு செயல்படுகிறது. அண்மைக்காலமாக சி.எஸ்.ஐ. அமைப்பின் நிா்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து விரிவாக விசாரிக்க அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளுக்கு மனு அனுப்பியும் பயன் இல்லை. எனவே, சி.எஸ்.ஐ. அமைப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சி.எஸ்.ஐ. அமைப்புகள் அரசாங்கத் துறைகள் இல்லை. எனவே, இதுபோன்ற சங்கங்களின் நிா்வாக விவகாரங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல.
மனுதாரா் தன்னுடைய கோரிக்கை குறித்து உரிய துறை அலுவலா்களை அணுகி அல்லது உரிமையயில் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.