பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!
அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!
அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் தகுதியானவா்களுருக்கு பதவி உயா்வு வழங்க தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.
இதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்துக்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 3 மண்டலங்களில் பணியாற்றும் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் வி. சரவணன் தலைமை வகித்து, பயணச் சீட்டு ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றவா்களுக்கு அதற்கான உத்தரவை வழங்கினாா்.
போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா்கள் மணி (மதுரை), முத்துகிருஷ்ணன் (திண்டுக்கல்), கலைவாணன் (விருதுநகா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.