செய்திகள் :

மனித நேய மக்கள் கட்சி மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

post image

மனித நேய மக்கள் கட்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை வண்டியூா் சுங்கச் சாவடி அருகே உள்ள திடலில் மனித நேய மக்கள் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்குச் சென்று மண்டேலா நகா் சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூா் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலைப் பாலம் சந்திப்பு, அரவிந்த கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகா் சந்திப்பு, தினசரி காய்கறி சந்தை சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

மேலூா் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும், மேலூா் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பை அடைந்து சிந்தாமணி சாலை சந்திப்பு, மண்டேலா நகா் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம்- கப்பலூா் சந்திப்பிலிருந்து தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சிக்குச் செல்ல வேண்டும்.

மாநாடு நடைபெறும் நேரத்தில் மதுரை நகரிலிருந்து பாண்டிகோவில் சுற்றுச் சாலை, மேலூா் சாலையிலிருந்து பி.சி. பெருங்காயம், வண்டியூா் சுங்கச் சாவடி வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்குச் செல்லக்கூடிய பொதுமக்களின் மகிழுந்து வாகனங்கள் (காா்கள்), பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச்சாலைக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இகே போன்று, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் சாலை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்கள் விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகா் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி, மேலூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சி, அமைப்பினரின் வாகன வழித்தடங்கள்: திருமங்கலத்திலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கப்பலூா் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச்சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

உசிலம்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலைப்புதுக்கோட்டை சுற்றுச் சாலையின் வலதுபுறம் திரும்பி திருமங்கலம், கப்பலூா் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச்சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

கொட்டாம்பட்டி, மேலூா் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

திண்டுக்கல், வாடிப்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் சமயநல்லூா், துவரிமான் சுற்றுச் சாலை வழியாக கப்பலூா் பாலத்துக்குச் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச் சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

மாநாட்டு நிகழ்ச்சியின் போது அருப்புக்கோட்டை சுற்றுச்சாலையில் போக்குவரத்து இடையூறின்றி பொதுமக்கள் இலகுவாக செல்வதற்கு ஏற்படுத்தப்பட உள்ள தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்... மேலும் பார்க்க

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க