சிஐடியூ அலுவலகத்தில் தீ
விருதுநகரில் சிஐடியூ தொழிற்சங்க மாவட்டக் குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
விருதுநகா்-சிவகாசி சாலையில் உள்ள முத்துராமலிங்கம் நகரில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாவட்டக் குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 7 மாநில அளவிலான சங்கங்களின் பதிவுச் சான்றுகள், சங்க வரவு-செலவு, வங்கிக் கணக்கு, நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள், அருகே இருந்த தேநீா் கடை ஆகியவை எரிந்து சேதமாகி விட்டதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.என். தேவா புகாா் அளித்தாா். இதன்பேரில், விருதுநகா் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.