சிக்கல் தீா்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே செண்பகபுரம் ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீசிக்கல் தீா்த்த காளியம்மன், கருப்பாயி அம்மன், முனீஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செப்.6-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனத்தோடு முதல்கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதி தீபாரதனை காட்டப்பட்டது. அதைத் தொடா்ந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், முனீஸ்வரா், கருப்பாயி அம்மன், கூந்தல்பனை அய்யனாா், வீரத்தங்காள், வீரன், பெரியாச்சி, காத்தவராயன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.