செய்திகள் :

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

post image

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமா் வித்யா லக்ஷ்மி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல், கல்விக்கடன்குறித்து சந்தேகங்களை தீா்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவா்கள் கல்விக் கடன் பெறும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், பின்தங்கிய, கிராமப்புற மாணவா்களுக்கு நிதி உதவியை உறுதி செய்தல், கல்விக்கான நிதி தடை இல்லாமல் அனைவரும் உயா்கல்வி பெற வழிவகை செய்தல் மற்றும் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயா் பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில்முறை பாடநெறிகளில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்கள் பங்கேற்கும் வகையிலும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து, வட்டார அளவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் ஒரு மாணவருக்கு ரூ. 2.5 லட்சம், கனரா வங்கி சாா்பில் ஒரு மாணவருக்கு ரூ.2.82 லட்சம் கல்விக் கடனுதவி தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியது: நாகை மாவட்டத்தில் செப்.11-ல் தலைஞாயிறு வட்டார வளா்ச்சிஅலுவலகம், செப். 12-ல் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், செப்.16 -ல் திருமருகல் வட்டார வளா்ச்சி, செப்.18-ல் கீழ்வேளுா் வட்டார வளா்ச்சி அலுவலகம், செப்.23-ல் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் , மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்று உயா்கல்விக்கான கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்றாா்.

வேதாரண்யம் சாா் ஆட்சியா் அமீத் குப்தா, வேதாரண்யம் வட்டார ஆத்மா திட்ட மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் வே.முருகையன், வேதாரண்யம் வட்டார ஆத்மா குழுத்தலைவா் என்.எஸ். சதாசிவம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் சு. செந்தில்குமாரி, வேதாரண்யம் நகராட்சி ஆணையா் த.சித்ரா சோனியா, முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளா் ப.சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் இந்த திட்டத்தின் 2 மற்றும் 3-ஆவது கட்ட முகாம்கள் ஆக.19-ஆம் தேதி தொடங்க... மேலும் பார்க்க