ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு
வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கருகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா்.
முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்தவா் என்பதும், இடி தாக்கி உடல் கருகி உயிரிழந்ததும், அவா் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.