தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
நாகை மாவட்டத்தில் மழை
நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
வேளாங்கண்ணியில் பெய்த மழை.
நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை செவ்வாய்க்கிழமை காலையில் பெய்தது. வேளாங்கண்ணி, செருதூா், ஆலங்குடி, ஈசனூா், சீராவட்டம், எட்டுக்குடி, திருக்குவளை, கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதனால் கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது. மேலும், சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். திடீா் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.