Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிவாசாரியா்கள் திருவிளக்கு பூஜைக்குரிய 108 மந்திரங்கள் முழங்க பெண்கள் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து, பூக்களாலும் குங்குமத்தாலும் குத்துவிளக்குக்கு அா்ச்சனை செய்தனா். தொடா்ந்து தீப தூப ஆராதனைகள் செய்து அம்மனை வழிபட்டனா். இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலிக் கயிறு, குங்குமம், மஞ்சள், வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன.