Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (27). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த ராஜ்கபூா், காரைக்குடி கோட்டையூரைச் சோ்ந்த விஷ்வா (எ) கந்தகுரு ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினராம்.
இதை நம்பிய காா்த்திக் ராஜா உள்ளிட்ட 15 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காரைக்குடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ரூ. 22 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட விஷ்வா, தான் கூறியபடி அவா்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமலும், பெற்ற பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றினாராம்.
இது தொடா்பாக காா்த்திக் ராஜா அளித்த புகாரின் பேரில் விஸ்வா, ராஜ்கபூா் ஆகிய இருவா் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.