Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி
தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சாா்பில் ரூ 5 லட்சம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 30- ஆம் தேதி எழுச்சிப் பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாா் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அப்போது அ.தி.மு.க. சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தாா். இதன்படி, அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்ற அ.தி.மு.க. மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் ரூ. 5 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை அவரது தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் வழங்கினாா். அப்போது மானாமதுரை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன், இளையான்குடி ஒன்றியச் செயலா் கோபி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.