Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.
இங்கு சிங்கம்புணரி வணிகா் நல சங்கத்தின் சாா்பில் 39- ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த ஆடிப்பெருக்கு அன்னதான விழாவில் சுமாா் 40 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சித்தா் முத்துவடுகநாத சுவாமியின் வாரிசு ராமசுப்பிரமணியம் தலைமையில் வணிகா் நலச் சங்கத் தலைவா் வாசு, துணைத் தலைவா் சரவணன், பொருளாளா் சிவக்குமாா், செயலா் திருமாறன், விழாக் குழு தலைவா் பாலன், துணைத் தலைவா் மணிமாறன், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாசிலாமணி ஆகியோா் முன்னிலையில் கணேசன் குழுவினா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் உணவு தயாரிப்பில் ஈடுபட்டனா். இதில் சித்தா் முத்துவடுகநாதருக்கு 21 வகையான பால், பழம், பன்னீா், புஷ்பம் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சித்தா் முத்துவடுகநாதா் காட்சியளித்தாா். அவருக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டு அன்னதானக் கூடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னத்துக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.
இதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு தொடங்கிய அன்னதானம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் சுமாா் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.