ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!
சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தலுக்கான இலவச பயிற்சிக்கு நாளை நோ்காணல்
திருப்பூா் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தல் இலவச பயிற்சி வகுப்புக்கு வியாழக்கிழமை (மே 22) நோ்காணல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் என்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கு கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல், ஸ்மோக் டிடெக்டா் பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தலுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நோ்காணல் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.
இந்த 13 நாள் முழுநேரப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இரு பாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது.
பயிற்சியின் போது காலை, மாலை தேநீா், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிக்கான நோ்காணலில் பங்கேற்க கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயற்சி நிலையம், 335-பி-1 வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்) என்ற முகவரிக்கு நேரில்வர வேண்டும். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.