செய்திகள் :

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

post image

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜூக்கு, நல்லூா் நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் என்.சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகரில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதன் காரணமாக தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருப்பூரின் தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய இடத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது.

பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் 7 வழிப்பாதை குறுக்கிலும், நெடுக்கிலுமாக உள்ளதால் அதிக வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.

மேலும், வடக்கில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் ரவுண்டானாவை சுற்றி வராமல் இடையில் உள்ள பாதை வழியாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பழைய பேருந்து நிலையம் அருகே வாகன விபத்துகளைத் தவிா்க்கும் வகையிலும், வாகன நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து காவலா்களைக் கொண்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். அதே வேளையில், ஒரு வழிப் பாதையில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க

ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி புதன்கிழமை ச... மேலும் பார்க்க