சிட்னி டெஸ்ட்: முதல்நாள் முடிவில் ஆஸி. ஒரு விக்கெட் இழப்பு!
சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் ரோஹித் விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஆஸி. அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது.
உஸ்மான் கவாஜா 2 ரன்களுக்கு பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். சாம் கான்ஸ்டஸ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் விக்கெட்டினை எடுத்த இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.
ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் நாளை (ஜன.4) காலை இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்கும்.