செய்திகள் :

சிதானந்தஜி: விரும்பியவாறே உங்கள் வாழ்க்கை அமைய எளிய ரகசியம்; கலந்து கொள்ளுங்கள் அனுமதி இலவசம்

post image

9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சிதானந்தஜி.

சிதானந்தஜி

பகுத்தறிவுடன் கூடிய சிந்தனைதான் மனிதனை மிருகங்களைவிட மேம்பட்டவனாய் ஆக்குகிறது. மேலும் பொறுமை; தியாகம்; தலைமை போன்ற நல்ல குணங்கள் எல்லாம் சேர்ந்து மனிதனை தெய்வ நிலைக்கும் அழைத்துச் சென்றது. ஒரு நல்ல குருவைப் பெற்றவர் ஞானியாகும் நிலை இந்தியாவில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. அந்நிலையில் சென்ற நூற்றாண்டின் தன்னிகரில்லா மெய்ஞ்ஞான குருவாக விளங்கியவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். அவரின் பிரதிநிதியாக விளங்குபவர் சுவாமி சிதானந்தஜி.

பரமஹம்ஸ் யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்தஜி தனது குருவின் போதனைகளை உலகெங்கும் பரப்புவதற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக தம் வாழ்வை அர்ப்பணித்தவர். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மற்றும் ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் (SRF/YSS) அமைப்பின் முதல்வராகவும் விளங்கி வருகிறார். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் சுவாமிஜியின் விரிவுரைகள், பயிற்சிகள் பல்லாயிரம் மக்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளது. சுவாமிஜியின் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, ஸ்ரீமிருணாளினி மாதாஜியுடன் (முன்னாள் சங்கமாதா மற்றும் YSS/SRF-ன் நான்காவது தலைவர்) இணைந்து பணியாற்றியுள்ளார், பரமஹம்ஸ யோகானந்தரின் படைப்புகளைத் தொகுத்து அமைப்பதற்கும் வெளியிடுவதற்கும் மாதாஜியின் பயிற்சியைப் பெற்றார்.

சிதானந்தஜி

சுவாமி சிதானந்தஜி இதற்கு முன்பு 2023, 2019, 2017 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அப்போது பல நகரங்களில் இவர் ஆற்றிய ஞான உரைகள் பலரது வாழ்வில் விழிப்புணர்வையும் முன்னேற்றத்தையும் அளித்துள்ளது. இவரது வழிகாட்டுதலும் சுயமுன்னேற்ற ஆலோசனைகளும் பலரை அமைதி நிறைந்த வெற்றியாளர்களாக மாற்றியுள்ளது. விஞ்ஞான பாதையில் மெய்ஞ்ஞான மேன்மையை போதிக்கும் சுவாமிஜியின் உரையும் அருளாசியும் உதவும்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியவாறே மாற்ற உங்களுக்கோரு நல்வாய்ப்பாக வரும் 9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சிதானந்தஜி. காலை 8 மணி முதலே பல்வேறு காலை நிகழ்வுகள், தியானம், கீர்த்தனை, சொற்பொழிவுகள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 6.30 மணிக்கு சுவாமி சிதானந்தஜி அவர்கள் ஆற்றும் சிறப்பான ஞான உரை உங்கள் வாழ்வை அமைதியும் தெளிவுமாக மாற்றும்.

சிதானந்தஜி

உலகம் முழுக்க பல்வேறு வெற்றியாளர்களை உருவாக்கிய சுவாமிஜியின் உரை உங்கள் வாழ்க்கையையும் விரும்பியவாறே மாற்ற உதவும். நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வாழ்க்கையையே மாறிவிடும் அதிசயத்தைக் காண்பீர்கள்.

கவனிக்கவும்: முன்பே வருபவர்கள் அல்லது முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்தபிறகே ஹாலில் அனுமதிக்கப்படுவீர்கள். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க நிச்சயம் அனுமதி இல்லை.

முன்பதிவு செய்ய தொலைபேசி எண் - 7305861965, 9600128440

மண்ணச்சநல்லூர்: ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது வீட்டிற்கு அ... மேலும் பார்க்க

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா!

விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா; கொடியேற்றத்துடன் விமர்சையாகத் தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (ஜனவரி 31) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மீனாட்சியம்மன்திருவிழாக்களின் நகரமான மதுரை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர சீரமைப்பு: `அதிசய மூலிகை ஓவியங்கள்’ - பக்தர்கள் வைக்கும் கோரிக்கை

மகா கும்பாபிஷேகம்முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணகான பக்தர்களும் விடுமுறை ... மேலும் பார்க்க

மருதமலை : ஆசியாவிலேயே பிரமாண்ட முருகன் சிலை - 160 அடி உயரத்தில் உருவாகும் கோவையின் புதிய அடையாளம்!

கோவை மருதமலை கோயிலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மருதமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்!

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ள... மேலும் பார்க்க