சித்திரைத் தேரோட்டம்: தஞ்சைப் பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்!
உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தேர் பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, பந்தக்காலிற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.