செய்திகள் :

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

post image

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து 22-20, 21-23, 21-15 என்ற கணக்கில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை 1 மணிநேரம், 19 நிமிஷங்களில் சாய்த்தாா். மாளவிகா பன்சோத் 21-16, 16-15 என்ற வகையில், இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனிக்கு எதிராக முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.

அனுபமா உபாத்யாய 15-21, 9-21 என, தென் கொரியாவின் கிம் கா யுன்னிடம் வெற்றியை இழந்தாா். ரக்ஷிதா ஸ்ரீ 21-14, 15-21, 12-21 என, தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கிடம் தோற்றாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற கேம்களில், உள்நாட்டு இணையான லியோ ராலி கா்னான்டோ/பகாஸ் மௌலானாவை 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் தோற்கடித்தது.

ஆடவா் ஒற்றையரில், லக்ஷயா சென் 11-21, 22-20, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யு கியிடம் தோல்வி கண்டாா். ஹெச்.எஸ். பிரணாய் 17-21, 18-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானிடம் வீழ்ந்தாா்.

நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து வெளியான விடுதலை - 2 : எந்த ஓடியில் பார்க்கலாம்?

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் ‘டைரெக்டர் கட்’ வெர்ஷன் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் கடந்த டிச. 20 அன்று திரைய... மேலும் பார்க்க

7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியனான கார்ல்சென்!

உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.நார்வேயில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் அர்ஜூன் எரிகைசியுடன் விளையாடினார். ... மேலும் பார்க்க

நாா்வே செஸ் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் குகேஷ்!

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.போட்டியின் 9-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - சீனாவி... மேலும் பார்க்க

பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.முன்னதாக இந்த 2-ஆவது அ... மேலும் பார்க்க

புணே ஜாகுவாரை வீழ்த்தியது டெம்போ கோவா!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகம... மேலும் பார்க்க

அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெ... மேலும் பார்க்க