செய்திகள் :

``சினிமாதான் என் வாழ்க்கையா மாறும்'னு நினைக்கல'' - தன் பயணம் தொடங்கியது குறித்து நயன்தாரா

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

நயன்தாரா
நயன்தாரா

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்திருக்கிறார்.

தற்போது கவினுடன் இணைந்து 'ஹாய்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேமரா முன்பான தன் பயணம் தொடங்கி 22 ஆண்டுகளானதை குறிப்பிட்டு நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கேமரா முன் நின்று இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. அந்த நேரத்தில் சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது.

நயன்தாரா
நயன்தாரா

ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

``என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா, நாராயணா-ன்னு சொல்லுங்க'' - ஆன்மிகப் பயணத்தில் ரஜினி அட்வைஸ்

ரஜினி 'ஜெயிலர் 2' படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள பாலக்காடு சென்றார், அங்கேயும் பரபரப்பு. சமீபத்தில் ஆன்மிகப் பயணமாக உத்தரகாண்ட் புறப்பட்டுப் போனார், அங்கேயும் பரபரப்பு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே ... மேலும் பார்க்க

``உயிரும் நீயே உண்மையும் நீயே'' - ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம் | Photo Album

ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்" - நடிகர் சிவ ராஜ்குமார்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது மனைவியுடன் நேற்று (அக்.8) சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவ ராஜ்குமார்... மேலும் பார்க்க

PVR INOX-ன் `Dine in Cinema', `Live kitchen'; டிக்கெட் விலை எவ்வளவு, படம் பார்க்கும் அனுபவம் எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய மல்டிபிளெக்ஸ் நிறுவனமான PVR INOX, தனது பிரத்தியேகமான 'டைன்-இன் சினிமா' (Dine-in Cinema) கான்செப்டை தற்போது பெங்களூரில் கொண்டு வந்திருக்கிறது. திரையரங்கில் சாப்பிட்டபடி படம் பார... மேலும் பார்க்க

அரசன்: சிம்புவுடன் இணையும் கன்னட நடிகர்; அனிருத் பிறந்தநாளில் புது அப்டேட்; ஜெட் வேகத்தில் படக்குழு

தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'எஸ்.டி.ஆர். 49'க்கு 'அரசன்' என தலைப்பு வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் அஷ்வத் மாரி... மேலும் பார்க்க