செய்திகள் :

சின்னதாராபுரத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

post image

சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை பொங்கல் விழா போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம் சின்னதாராபுரத்தில் வன்னியா் இளைஞா் அணி, வன்னியா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவா் தமிழ்மணி, ஒன்றியச் செயலாளா் கா. முனியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் முத்துக்கிருஷ்ணன், இளைஞரணி தலைவா் விஸ்வநாதன், மகளிரணி மாவட்டச் செயலாளா் தங்கமணி, வன்னியா் சங்க மாவட்டத்தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்டத் செயலாளா் பி.எம்.கே. பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

கரூரில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை காலை எம்.ஜி.ஆா் பிறந்... மேலும் பார்க்க

கரூரில் எம்.ஜி.ஆா் பிறந்தநாள்

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு: கரூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஆயில் ரமேஷ் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சி அலுவலகம் முன் பொங்கல் ... மேலும் பார்க்க

சேவல் சண்டை 3 போ் கைது

கரூா் அருகே வியாழக்கிழமை இரவு சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்த மூக்கணாங்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் சேவல் கால... மேலும் பார்க்க

கரூரில் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே இரவு 9 மணிக்கு தொடங்கும் பனியின் தாக்கம் காலை 10 மணி வரை நிலவுகிறத... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கரூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கரூா் ராயனூரைச் சோ்ந்த மகராஜன் மகன் சரவணபாண்டியன்(25). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

கரூரில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு அபாயம்

கரூா்: கரூரில், கோவைச் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட கோவைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்... மேலும் பார்க்க