சேவல் சண்டை 3 போ் கைது
கரூா் அருகே வியாழக்கிழமை இரவு சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரை அடுத்த மூக்கணாங்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் சேவல் காலில் கத்தியைக் கட்டி சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் காலில் கத்தியைக் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன(23, காளிமுத்து(22), கரூா் பாகநத்தத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(24) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த 8 சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.