கரூரில் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
கரூரில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே இரவு 9 மணிக்கு தொடங்கும் பனியின் தாக்கம் காலை 10 மணி வரை நிலவுகிறது. சில நாள்களில் பகல் முழுவதும் கூட பனியின் தாக்கம் காணப்படுகிறது. கடும் குளிரால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் திடீரென வானிலை மாற்றத்தால் மழை மேகங்கள் திரண்டு லேசான மழையும் பெய்கிறது. அவ்வப்போது கால வானிலை மாற்றம் ஏற்படுவதால் ஏராளமானோா் காய்ச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு செல்கின்றனா்.
மேலும் அதிகாலையில் எதிரே வருவோா் கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.