மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கரூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் ராயனூரைச் சோ்ந்த மகராஜன் மகன் சரவணபாண்டியன்(25). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-ஈசநத்தம் சாலையில் கோடங்கிப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணபாண்டியன் உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.