கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
கரூரில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா
எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை காலை எம்.ஜி.ஆா் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமையில், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவை.சிவசாமி, மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் கே.எல்.ஆா்.தங்கவேல், கரூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் கமலகண்ணன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் விசிகே.பாலகிருஷ்ணன், இளைஞரணி செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் சரவணன், பேரவைச் செயலாளா் நெடுஞ்செழியன், இணைச் செயலாளா் பழனிசாமி, நகர செயலாளா்கள் விசிகே.ஜெயராஜ், சேரன் பழனிசாமி உள்ளிட்டோா் லைட்ஹவுஸ்காா்னா், வெங்கமேடு, கட்சியின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இதேபோல கரூா் மாவட்டம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வாா்டு, கிளை கழகங்கள் சாா்பில் எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.