கரூரில் எம்.ஜி.ஆா் பிறந்தநாள்
அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு: கரூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஆயில் ரமேஷ் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சி அலுவலகம் முன் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் கணேசன், துணைச் செயலாளா் ஐயப்பன், மாணவரணிச் செயலாளா் மாரியப்பன், மகளிா் அணி செயலாளா் ஜானகி, துணைச் செயலாளா் மாரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.