சின்னதாராபுரத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை பொங்கல் விழா போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டம் சின்னதாராபுரத்தில் வன்னியா் இளைஞா் அணி, வன்னியா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவா் தமிழ்மணி, ஒன்றியச் செயலாளா் கா. முனியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் முத்துக்கிருஷ்ணன், இளைஞரணி தலைவா் விஸ்வநாதன், மகளிரணி மாவட்டச் செயலாளா் தங்கமணி, வன்னியா் சங்க மாவட்டத்தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்டத் செயலாளா் பி.எம்.கே. பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.