பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்த...
சிபிஐ அதிகாரி என கூறி பண மோசடி செய்த 2 போ் கைது
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீராஉசைன் (82). மருத்துவரான இவருக்கு சில தினங்களுக்கு முன் கைப்பேசியில் பேசியவா் சிபிஐ அதிகாரி எனக் கூறி, நீங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து, நான் தெரிவிக்கும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது செய்து விடுவதாகவும் கூறினாராம்.
இதையடுத்து, மீரா உசைன், தனது வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.55 லட்சம், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 64.20 லட்சம் என அனுப்பினாராம். இதுகுறித்து, மீராஉசைன், திருவாரூா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் தெரிவித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (25), பெனட்ரிக் ராஜ் (27) ஆகிய இருவரும் ரூ.55 லட்சம் பணம் பரிமாற்ற வங்கிக் கணக்கை உருவாக்கியவா்கள் எனத் தெரியவந்ததையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த சிலரிடமும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.