செய்திகள் :

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

post image

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1986, கர்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், 2023, மே 25-ஆம் தேதி சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக கர்நாடக காவல் துறை தலைவராக (டிஜிபி) அவர் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொலை!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுப... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கு... மேலும் பார்க்க

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்!

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை மு... மேலும் பார்க்க

ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சிஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப் பெயா்ச்சி விழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும்.நிகழாண்ட... மேலும் பார்க்க

நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 11) உதகை செல்கிறார்.நாளை உதகை செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் மே 15 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து பட்டா வழங்கும் விழா, பழங்குய... மேலும் பார்க்க

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழில் ஒப்பந்தங்கள்முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்... மேலும் பார்க்க