செய்திகள் :

சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!

post image

நடிகர் சிம்புவின் 49-வது படத்தில் நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர் - 49’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நீண்ட காலம் கழித்து சந்தானமும் காமெடியனாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க

போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது: இயக்குநர் ஞானவேல்

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தி... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 4 கோமாளிகள் புதிதாகப் பங்கேற்கவுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் ... மேலும் பார்க்க

96 - 2 படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

பி.சி.ஸ்ரீராம் 96 - 2 படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர... மேலும் பார்க்க

நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்‌ஷ்மி பிரியா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் ... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் - நடிகர்!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான பூவையார் பங்கேற்கவுள்ளார். சமையல் கலைஞராக அல்லாமல், கோமாளியாகப் பங்கேற்கவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து... மேலும் பார்க்க