ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
சிராவயல் மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள்: கிராமத்தினா் மும்முரம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிராவயலில் லட்சக்கணக்கானோா் பங்குபெறும் பாரம்பரிய மஞ்சுவிட்டு ஆண்டுதோறும் தை மாதம் 3 -ஆம் தேதி நடைபெறும். இதற்காக மதுரை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும்.
முன்னதாக ஊரில் உள்ள பெரியநாயகியம்மன், தேனாச்சியம்மன் கோயிலிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, காளைகளுக்கு வேட்டித் துண்டு அணிவித்து, வாடியில் கட்டப்படும். இதற்காக தற்போது தொழுவத்தின் முன் பகுதியில் 300 மீ. தூரம் வரை கல்லுக்கால் ஊன்றப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டது.
வீரா்கள், காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க தென்னை நாா் பரப்பப்பட்டது. இதற்கானப் பணிகளை கிராமத்தினா் ஆா்வத்துடன் செய்து வருகின்றனா். அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.