பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!
ஆப்பிரிக்காவிலுள்ள சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்து விட்டதாக சிரியா உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது.
சிரியாவில் கடந்த ஆண்டு இறுதியில் அரசுப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை 2024 டிசம்பா் 8-ஆம் தேதி கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.
அதையடுத்து, ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கடந்த ஜனவரி 30-இல் அறிவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சிரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் புதிய அரசின் படையினருக்கும் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் புதிய அரசின் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.