டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை
காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹமாஸின் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக்கின் சுற்றுலாத் தளமாக மாற்றவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கான தனது முன்மொழிவைக் கூறியிருந்தார்.
காஸாவைக் கைப்பற்றவிருப்பதாக டிரம்ப் கூறியதையடுத்து, ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காஸா விற்பனைக்கு அல்ல’ என்று பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.
இதையும் படிக்க:அமெரிக்கா: ஹிந்து கோயிலில் தாக்குதல்
அதுமட்டுமின்றி, மைதானத்தைச் சேதப்படுத்தி, `காஸாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.