அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உ...
சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதிலும் சிறகடிக்க ஆசை தொடர், மற்ற தொடர்களின் டிஆர்பி புள்ளிகளைக்காட்டிலும் அதிகம் டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வாரந்தோறும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.
இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர். கூட்டுக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இத்தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், சிறகடிக்க ஆசை தொடர் குழுவுக்கு ரசிகர்கள் பலர், சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!