Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின்...
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட 2 சீன கைதிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை- காரணம் என்ன?
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. பண மோசடி, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த ஷியா மாக் மற்றும் யுவான் லூன் ஆகிய இருவர் ஆன்லைனில் பணம் மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை சிறப்பு முகாமிற்கு வந்த ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமில் உள்ள சீனாவைச் சேர்ந்த அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
ஆன்லைன் மோசடி மற்றும் அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகின. இருவரிடமும் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான அந்த சிறப்பு முகாமில் கடந்த 2022-ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் சிறப்பு முகாமில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.