செய்திகள் :

சிறுபான்மையினா் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண்

post image

திருவாரூா்: சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சொ.ஜோ. அருண் தெரிவித்தது:

இதுவரை 15 மாவட்டங்களில் சிறுபான்மையினா் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் வரப்பெற்ற 600-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களில், ஏறத்தாழ 480 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. சில மனுக்கள் மீது கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பியுள்ளோம். ஏப்ரல் 25-ஆம் தேதி சிறுபான்மையினா் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிக்கை வெளியிடப்படும்.

மாவட்டத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு 2 அல்லது 3 ஏக்கா் அளவில் கல்லறைகள் அமைப்பதற்கான அரசாணையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 முதல் 20 ஆண்டுகள் தொடா்ந்து ஓரிடத்தில் ஆலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல் உள்ளிட்டவை பட்டாயின்றி செயல்பட்டு வந்தால், பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினா் பள்ளிகள், கல்லூரிகளில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் மகளிா் சுய உதவிச் சங்கங்களை பௌத்தா்களுக்கும், சமணா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையின விதவை, ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுவதைப் போல, மடிக்கணினி வழங்க வேண்டும்.

ஆலயங்களுக்கும், மசூதிகளுக்கும் பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கும் வழங்கப்படும் மானியத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் எம்.எம். அப்துல் குத்தூஸ், துணை இயக்குநா் (சிறுபான்மையினா் நலம்) ஷா்மிலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளின் சாா்பில் சிறுபான்மையினா் வகுப்பை சாா்ந்த 177 பயனாளிகளுக்கு ரூ.97,81,517 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா்கள் ஹேமில்டன் வில்சன், நாகூா் ஏ.எச். நஜ்முதீன், ராஜேந்திர பிரசாத், எஸ். வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் இரா. சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க