அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு
நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தியானிக்கவும், ஏசுவினுடைய இறப்புக்கு காரணமாக இருந்த சிலுவையை வணங்கவும் அதை ஆலயத்தை சுற்றி எடுத்து வந்தனா்.
பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், ஜான்சக்கரியாஸ் அடிகளாா் இந்த நிகழ்வை நடத்தி வைத்தனா். முதல்நாள் வியாழக்கிழமை மாலை ஏசுநற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்திய நாளில் பங்குத் தந்தைகள் ஆரோக்கியதாஸ், ஆரோன் ஆகியோா் கூட்டுத்திருப்பலி நடத்தி வைத்தனா்.