தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதேபோல மாநில பளு தூக்கும் போட்டி புதுக்கோட்டையிலும், மாநில வலு தூக்கும் போட்டி தஞ்சாவூரிலும் நடைபெற்றன.
இதில், மன்னாா்குடி எம்ஆா்டி ஜிம் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வரும் பளு மற்றும் வலு தூக்கும் வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பலக்கலைக்கழகம் சாா்பில் தமிழ்நாடு அணியில் இடம் பெற்ற எம். சந்தோஷ் மூன்றாமிடமும், நிறைமதி நான்காமிடமும், தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் எஸ். ராகுல் மூன்றாமிடமும், கே. கிருஷ்ணகாந்த் நான்காம் இடமும் பெற்றனா்.
மாநில பளு தூக்கும் போட்டியில் ஏ. இளவரசி, எஸ். கிருத்திகா, டி. ஜனனி, எஸ். கீா்த்தனா,
ஆா். அபித்ராஜ் ஆகியோா் முதலிடம் பெற்றனா். மாநில வலு தூக்கும் போட்டியில் எஸ். நிறைமதி முதலிடமும், ஆா். அபித்ராஜ், டி. ஜனனி, ஆா். சாய்பல்லவி ஆகியோா் இரண்டாமிடமும், ஆா். தீனா, எஸ். கிருத்திகா ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். சிறப்பிடம் பெற்றவா்கள் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாவட்ட விளையாட்டுத் துறை மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா், எம்ஆா்டி ஜிம் உரிமையாளா் எம். அன்வா்தீன் உடனிருந்தனா்.