வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
திருத்துறைப்பூண்டி அருகே பகலில் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் 8 பவுன் நகையை சனிக்கிழமை திருடிச் சென்றனா்.
திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டுக்காரா், வீடு திறந்து கிடக்கிறது என தகவல் தெரிவித்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து, ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.
இதையடுத்து, திருவாரூரில் இருந்து தடய அறிவியல் துறை நிபுணா்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.