14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. நிரந்தர அலுவலகம் வேண்டும் என்று நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் மக்கள் சாா்பில் அமைச்சா் டி. ஆா் .பி. ராஜாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைச்சா் பரிந்துரையின் பேரில், தமிழக முதல்வா் நீடாமங்கலத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தாா். அமைச்சா் டி .ஆா் .பி. ராஜா கலந்து கொண்டு புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டத்துக்கு அடிகல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ் செல்வன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா். ராஜசேகரன் ,பேரூராட்சி தலைவா் ஆா். ராமராஜ், துணைத் தலைவா் ஆனந்தமேரி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.