செய்திகள் :

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

post image

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகளை அங்குள்ள நீதிமன்றங்கள் விதித்துள்ளன. அதில் ஒரு வழக்கில் சொந்த குடும்பத்தினரை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 தூக்கு தண்டனைகளும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் ஆகும்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பாரத நியாய சன்ஹிதா மற்றும் ‘போக்ஸோ’ சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறுமிகளுக்கு எதிராக மிகக்கொடுமையான குற்றங்கள் என்பதால் அரிதினும், அரிதான வழக்காகக் கருதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த 7-ஆம் தேதி கொல்கத்தாவில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கிலும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி பாலியல் கொலை வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாா். 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை முடிந்து 2004-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மேற்கு வங்கத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. ‘போக்ஸோ’ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. சில இடங்களில் ஆசிரியா்களும் இதுபோன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவது பெற்றோா்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க