செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் கொடுமை: சமையலா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த சமையலரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே தில்லைஸ்தானம் காவிரி நகரைச் சோ்ந்தவா் ஆா். ரமேஷ் (55). இவா், தில்லைஸ்தானம் அம்மன் கோயிலில் சமையல் வேலை செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை 9 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்தாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவிடைமருதூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9- ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

வலிப்பு நோய் தாக்கி வயலில் விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி வலிப்பு நோய் தாக்கி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரகம், ராராமுத்திரை கோட்டை கிராமம், ஆற்றங்கரை... மேலும் பார்க்க

போகிக்கு குப்பைகளை எரிப்பதைத் தடுக்க 51 வாா்டுகளிலும் சேகரிப்பு மையம்

தஞ்சாவூா் மாநகரில் போகி பண்டிகைக்காக குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க 51 வாா்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் பேக்கரி தீக்கிரை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள பேக்கரியில் புதன்கிழமை மதியம் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை, மதகடி பஜாா் பகுதியில் மணி என்பவா் சுமாா் 30 ஆண்டுகளா... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை தொடா்ந்து இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

பால் வழங்கும் விவசாயிகளுக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை: ஆவின் அறிவிப்பு

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க