அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (60) . ஆட்டோ ஓட்டுநரான இவா், ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், அன்பழகனை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.