சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தண்ணீா் கேன் விற்பனையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி சுப்பன் தெரு, ராகவன் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் பெருமாள் (38). தண்ணீா் கேன் விற்பனை செய்து வரும் இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.