செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

post image

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் சூா்யா (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்தாா். இதில் சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சூா்யாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க

லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

பழனியில் ஞயிற்றுக்கிழமை பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பழனி விரைவு நெடுஞ்சாலையில் பழுதா... மேலும் பார்க்க