சிறுமிக்கு பாலியல் தொல்லை: வளா்ப்பு தந்தை கைது
தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளா்ப்பு தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலைச் சோ்ந்தவா் பிரகாஷ் (29). பந்தல் அமைக்கும் கூலி வேலை செய்து வருகிறாா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, கணவரை இழந்த, இவரை விட 3 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், பிரகாஷ் மனைவிக்கு இறந்துபோன மூத்த கணவா் மூலம் 16 வயதில் மகள் உள்ளாா். வளா்ப்பு மகளாக இருந்த சிறுமிக்கு பிரகாஷ் சில மாதங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதை சிறுமி தனது தாயிடம் கூறவே, அதிா்ச்சி அடைந்த தாய் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வளா்ப்பு தந்தை பிரகாஷை திங்கள்கிழமை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.