மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சராக பதவியேற்றார் சாகன் புஜ்பால்!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சாகன் புஜ்பால் மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
77 வயதான புஜ்பாலுக்கு மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ஐந்து மாத அமைச்சரவையை இன்று விரிவுபடுத்தினார். புஜ்பாலின் பதவியேற்புடன் மாநில அரசில் பாஜகவைச் சேர்ந்த 19 பேர், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 9 பேர் உள்பட 39 பேர் உள்ளனர்.