தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
தங்க நகைக்கடன்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒன்பது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் என்ன?
அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவிகித தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும்.
அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
குறிப்பிட்ட தங்க நகைகளுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும். கட்டாயம் 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
வெள்ளிப் பொருள்களுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஒரு கிலோ வெள்ளி மட்டுமே அடகு வைக்க முடியும்.
நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
24 கேரட் நகைகளுக்கும் 22 கேரட் நகையின் மதிப்பு அடிப்படையிலேயே கடன் வழங்க வேண்டும்.
அடகு வைக்கப்பட்ட நகையை திருப்புவதற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர் செலுத்திய 7 நாள்களுக்குள் நகையை திருப்பி அளிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கியில்லா நிறுவனம், நகையின் உரிமையாளருக்கு தாமதமாகும் நாளொன்றுக்கு ரூ. 5,000 இழப்பீடாக கொடுக்க வேண்டும்.